Total Pageviews

Wednesday, March 18, 2015



மார்ச் 19 - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


2015 மார்ச் 19 அன்று

ERP அமுலாக்கம் காரணமாக எழுந்துள்ள... 

பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி...

மாநிலம்... தழுவிய... கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...

  • GPF மற்றும் மருத்துவ பில்களை ERP மென்பொருளில் மேம்படுத்துதலில் உள்ள பிரச்சனைகளை தீர்த்திட வேண்டும்.
  • GPF மற்றும் மருத்துவ பில்கள் பட்டுவாடாவில் கால தாமதம்.
  • விடுப்பு எடுக்க சிரமம்.
  • ஊதிய பட்டியல் எடுக்க அலையும்... அவலம்...
  • மின் கட்டணம், செல் கோபுரம் மற்றும் கட்டிட வாடகை கால தாமதம்.
  • ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பட்டுவாடா கால தாமதம்.
  • GPF கணக்கு இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது.
  • சில ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளன.
  • பலரின் பரிந்துரை (Nomination) விவரங்கள் ERP-யில் இல்லை.
  • வருமான வரி விலக்கத் தொகை கணக்கிடுவதில் சிக்கல்.
  • பிடித்தம் செய்யப்படும் சொசைட்டி மற்றும் வங்கிக் கடன் சரிவர சென்று சேர்வதில்லை.
  • தொழில் வரி தவறுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
  • பணி ஓய்வு மற்றும் இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு விடுப்பு சம்பளம் வழங்க கால தாமதம்.
  • சங்கங்களுக்கான சந்தா பிடித்தம் மூன்று மாதம் ஆகியும் சரியான பாடு இல்லை.
  • கடன் நிலுவை முடிந்த பின்னும் பல பிடித்தங்கள் தொடர்ந்து செய்யப்படுகிறது.
  • எது... யாரிடம்... கேட்பது... என குழப்பம்.
  • திட்டமிடாத... புதிய மாற்றம்... ஊழியர்கள் திண்டாட்டம்.
  • மாநில நிர்வாகம் பார்வையாளராக இருந்து வருவது ஏன்?.
  • மாற்றத்தை ஏற்போம்... குளறுபடிகளை எதிர்ப்போம்...

மாவட்ட சங்கம் சார்பாக...

19-03-2015 - வியாழன் - கா லை 10.00 மணி

CTMX  தொலைபேசி நிலையம், மதுரை  - 625 002.

மதியம் 1.00 மணிக்கு GM அலுவலகம்  பி பி குளம் மதுரை -625002

நடைபெறும். 

ஊழியர் நலன் காத்திட... சிரமங்களை அகற்றிட...

ஆர்ப்பரிப்போம்...! தோழர்களே...!!

அனைவரும் வருக...! ஆர்ப்பரித்து வருக...!!

தோழமையுடன் 

S .சிவகுருநாதன் மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment