Total Pageviews

Friday, March 06, 2015



NFTE - BSNL 
மதுரை மாவட்டச் சங்கம் 

சர்வதேச உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

சர்வேதேச உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் NFTE மதுரை மாவட்டச் சங்கம் பெருமை கொள்கிறது !! 

அமெரிக்காவில் தொழிற்சாலைகளில் 16 மணி நேரம் வேலை, குறைந்த கூலி, மோசமான பணிச்சுழல் காரணமாக பெண்கள் வீதிக்கு வந்து போராடியதன் விளைவாக மார்ச் 8 சர்வதேச  உழைக்கும் மகளிர் தின உருவானது.  உழைக்கும் மகளிர் போராட்டத்தில் தான், ஆணுக்கு நிகராக பெண்ணும் சலுகைகளைப் பெற முடிந்தது.

1990-ல் இந்திய மகளிர் ஆணையம் தொடங்கபட்டது. இந்தியாவில் 1993ல் நகர்பாலிக திட்டம் மூலமாக பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு இட ஒதிக்கீடு கிடைத்தது. இந்தியாவில் 53%பெண்கள் தலைமைப் பொறுப்புகளில் இருக்கிறார்கள் ,தற்பொழுது குடும்ப வன்முறை என்பது குறைந்துள்ளது .

             "ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி 
             இருந்தவர் மாய்ந்து விட்டார்  - வீட்டுக்குள்ளே 
             பெண்ணை பூட்டி வைப்போம் என்ற 
             விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் "                -புரட்சிக்கவி பாரதியார் 


பெண் என்பவள் ஒரு ஆணின் "Bettar Half " ஆகும். அந்தப் பாதியின்  அழிவில் மீதியின் வாழ்வு நிலைப்பதில்லை. பெண்ணினத்தின் வாழ்வும் தாழ்வும் சமூகத்தின் உயர்வும் அழிவுமாகும்.

               "கண்கள் இரண்டில் ஒன்றைக் குத்தி 
               நல்ல காட்சி கெடுத்திடலாமோ?"                  -புரட்சிக்கவி பாரதியார் 


    பெண் விடுதலை என்பது ஆண்களின் சிந்தனை மாற்றத்தில் உருவாகும் புரிதலாகும். அந்தப் புரிதல் தான் புதிய பெண் உலகம் படைக்கும்

சர்வதேச மகளிர் தின  புரட்சிகர வாழ்த்துக்களுடன் !


தோழியர். T.பரிமளம்
மாநிலத் துணைத் தலைவர்

தோழியர் . இந்திராணி சுந்தரராஜ் 
மாவட்ட துணை செயலர் 


தோழியர் . K. R. கலாவதி 
மாவட்டத் துணைத் தலைவர் 

தோழியர் . பாத்திமா பீவி 
கிளைத் துணை செயலர்

தோழர். G. ராஜேந்திரன் 
   மாவட்டத் தலைவர் 


தோழர். S. சிவகுருநாதன் 

மாவட்டச் செயலர் 

No comments:

Post a Comment