Total Pageviews

Tuesday, April 21, 2015

                                                 
       BSNL அணைத்து 
            ஊழியர்கள் ,அதிகாரிகள்              சங்கங்கள்கூட்டாமைப்பு
மதுரை தொலைதொடர்பு மாவட்டம் 

                    முதல் நாளான ஏப்ரல்-21 இன்று நமது மதுரை தொலை தொடர்பு 
                        மாவட்டத்தில் போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.


மதுரை பொதுமேலாளர் அலுவலக முன் வாயில்

பொது மேலாளர் அலுவலக CSC, பீபிகுளம், 

மதுரை 


பொது மேலாளர் அலுவலக CSC, பீபிகுளம், 

மதுரை 


                     
   தல்லாகுளம் வாடிக்கையாளர் சேவை மையம் 


மதுரை லெவல்-4 வளாக முன் நுழைவு வாயில், தல்லாகுளம்
=========================================

திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்ட 

ஆர்பாட்டம் 







பழனியில் நடைபெற்ற போராட்ட ஆர்பாட்டம் 



நமது மதுரை தொலை தொடர்பு  மாவட்டத்தில் உள்ள 162 தொலைபேசியகங்களில் கிட்டத்தட்ட அனைத்தும் மூடிக்கிடந்தன என்ற செய்தி தான் வந்துள்ளது. எதோ ஒரு சில இடங்களில் ஒரு சில விரல் விட்டு எண்ணக்கூடிய சில நண்பர்கள் வந்ததாக செய்திகள் கிடைத்துள்ளன. மாவட்ட மையம் அதை மிக சீரியசாக பார்க்கிறது. வேலை நிறுத்தம் செய்யாமல், பணிக்கு வந்த ஒரு சிலர்கள் ஒன்றும் புரியாதவர்கள் என்று அர்த்தம் அல்ல.... மாறாக  மற்றவர்களை ஏமாற்றுவதாக  நினைத்துக்கொண்டு, அவர்களை அவர்களே! ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். நமது துறை வளர்ச்சிக்காக நமது முந்தய தலைவர்கள், தோழர்கள்  தனது உடலில் உள்ள  உறுப்புக்களை இழந்து ஊனமாகி இருக்கின்றார்கள், ஏன்  உயிரை கூட இழந்திருக்கின்றார்கள். பல்வேறு தியாகத்தால் வளர்க்கப்பட்ட இந்த BSNL நிறுவனத்தை 
அரசும் + தனியார் கம்பெனிகளும் கூட்டுச் சதியால் அளிக்க முற்பட்டு இருக்கிறார்கள்.

நமது BSNL பாதுகாப்பிற்க்கான போராட்டத்தில் யாரேனும் விலகி இருந்தால் அது துரோக செயலாகும். ஆகவே, அப்படிப்பட்ட செயலை யாரும் செய்ய வேண்டாம் என மாவட்ட மையம் கேட்டுக்கொள்கிறது.....

போராடுவோம்! வெற்றி பெறுவோம்!!
இறுதி வெற்றி நமதே!! 
போராட்ட வாழ்த்துக்களுடன்
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment