Total Pageviews

Thursday, May 07, 2015

  NFTE -BSNL
மதுரை தொலைத்தொடர்பு மாவட்டச்சங்கம் , மதுரை 



பெறுநர் 
                   செயலர் , நிர்வாக தரப்பு  LJCM 
                   உதவி பொதுமேலாளர்  (நிர்வாகம் )
                  பொதுமேலாளர்  அலுவலகம்  BSNL 
                   மதுரை  - 625002.

Madem ,
                   பொருள்  : 4 வது  LJCM நடத்துவது தொடர்பாக .

                    வணக்கம் 

                     இன்றைக்கு 06.05.2015 அன்று சுமார் 12.30 மணியளவில்  ஊழியர் தரப்பு செயலர் திரு . S .சூரியன் மூலமாக வருகிற 08.05.2015 அன்று  4 வது LJCM நடைபெறுவதாக அறிகிறேன் . இதில் ஊழியர் தரப்பு செயலர் மற்றும் தலைவர் கலந்தாலோசித்து நிர்வாகத்துடன் தேதி குறிப்பது என்பது மரபு . அந்த மரபு திரு .S .சூரியன் அவர்களால் மீறப்பட்டுள்ளது .

                     ஒரு நாள் கால அவகாசத்தில் LJCM  தேதி நிர்ணயம் செய்யும் நடைமுறையை  நாங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது . கடந்த மாவட்ட செயற்குழு முடிவின் அடிப்படையில்  உறுப்பினர் சந்திப்பு இயக்கம் நடத்துவது என்று திட்டமிடப்பட்டு இரண்டாவது கட்டமாக வருகிற 7,8 தேதிகளில் வத்தலகுண்டு கோட்டத்திற்கு உட்பட்ட தொலைபேசி நிலையங்களில் உள்ள ஊழியர்களை சந்தித்து , பிரச்சனைகளை கேட்டு அறிவது என்று திட்டமிடப்பட்டு , அதற்கான தயாரிப்புகள் முழுமையாக நடந்து முடிந்து , நாளை காலை மாவட்ட நிர்வாகிகள் புறப்படுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ள சூழலில் இந்த 08.05.2015 தேதி நடைபெறக்கூடிய 
LJCM கூட்டதில் நாங்கள் கலந்து கொள்ள இயலாது .

                    ஊழியர் தரப்பு செயலர் ,தலைவர் இணைந்து LJCM கூட்டத்திற்கு 
Agenda அனுப்புவது என்ற நடைமுறை மீறப்பட்டு CSC , தல்லாகுளம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சுழல் மாற்றல் பிரச்சினை ஏற்கனவே  இரண்டு சங்கங்களும் தனித்தனியே  நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் போதுஅந்தப் 
பிரச்சினையை  LJCM  கூட்டத்திற்கு Agenda வாக BSNLEU மாவட்ட செயலரும்  LJCM ஊழியர் தரப்பு செயலருமான திரு . S .சூரியன் தன்னிச்சையாக அனுப்பி உள்ளதாக நாங்கள் அறிகிறோம் .

                    மேற்க்கண்ட மூன்று காரணங்களுக்காக நாளை மறு நாள் 08.05.2015 அன்று நடை பெறுவதாக  வாய் மொழி மூலம் 
ஒரு தலைப்பட்சமாக  அறிவிக்கப்பட்ட , உள் நோக்கம் கொண்ட LJCM கூட்டத்தில் NFTE சங்க LJCM உறுப்பினர்கள் கலந்து கொள்ள இயலாது எனவே  ஊழியர் தரப்பு செயலர் , தலைவர் மற்றும் நிர்வாகம் ஆகிய மூன்று தரப்புக்கும் இசைவாக வேறு ஒரு தேதியை நிர்ணயம் செய்து நடத்தப்பட வேண்டுகிறோம் . NFTE சங்கத்தை புறக்கணித்துவிட்டு  BSNLEU செயலர் ,ஊழியர் தரப்பு செயலர் என்ற அடிப்படையில்  எடுக்கப்படும் எந்த முடிவுகளும் எங்களை கட்டுப்படுத்தாது என்பதனை வருத்தத்துடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம் .


நன்றி !

S .சிவகுருநாதன் ,
ஊழியர் தரப்பு தலைவர்  LJCM 

நகல் :-
               1. சேர்மன்  மற்றும்  பொது மேலாளர் ,BSNL மதுரை ,
               2.  துணை  பொது மேலாளர் ,BSNL மதுரை ,
               3.  தோழர் .R . பட்டாபி ,மாநில JCM ,தலைவர் ,சென்னை ,
               4.   அனைத்து LJCM உறுப்பினர்கள் ,NFTE -BSNL மதுரை .
                                                                                                                 
                   

No comments:

Post a Comment