Total Pageviews

Wednesday, July 29, 2015



மாபெரும் வெற்றி...! கேடர் பெயர் மாற்றம்...!!




28-07-2015 அன்று  நடைபெற்ற கேடர் பெயர் மாற்ற கூட்டத்தில் 

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

  • RM களுக்கு - Telecom Assistant
  • TM களுக்கு - Telecom Technician 
  • TTA களுக்கு - Junior Engineer 
  • Sr.TOA ( NE-11 மற்றும் NE-12) களுக்கு - Office Superintendent
  • இதர Sr.TOA களுக்கு - Office Associate


S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Monday, July 27, 2015

அணிதிரள்வோம் திருமங்கலம் நோக்கி ....


எழுச்சியுடன் 

போராடுவோம்...

அநீது கண்டு ஆர்ப்பரித்து போராடாமல்
அநீது களைய முடியாது
போராட்டங்கள் இல்லாமல்
யார் ஆட்டமும் செல்லாது
போராடுவோம்! வெற்றி பெறுவோம்!!
இறுதி வெற்றி நமதே!! 
அனைவரும் திரள்வீர் 

S . சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

   நெஞ்சார்ந்த நன்றி !நன்றி !!நன்றி !!!  
பதிவானவாக்கு   :   195
A .விஸ்வநாதன் , TM  :  127 வாக்குகள் பெற்று அமோகவெற்றி  பெற்றார் .

இக்குனர் தேர்தலில் 
                                     தோழர் .A .விஸ்வநாதன் ,TM
அவர்களுக்கு வாக்களித்த தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி !நன்றி !!

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Saturday, July 25, 2015


தோழர்களே ,தோழியர்களே 
கூட்டுறவு பண்டகச்சாலை 
இக்குனர் வேட்பாளர் 
தோழர் .A விஸ்வநாதன் ,TM அவர்களுக்கு 
வரிசை எண். 2 ல் வாக்களித்து 
வெற்றி பெறசெய்யுங்கள் என்று 
கேட்டுக்கொள்கிறோம் .
குறிப்பு :வாக்களிக்க வரும்போது 
அடையாள அட்டையுடன் வரவும் .
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Thursday, July 23, 2015


ஜூலை-23

விடுதலை போராட்ட வீரர் லோகமான்ய திலகர் பிறந்த தினம் - 



S ,சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

ஜூலை 23 
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய  சிவா 
நினைவு தினம் 


S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Tuesday, July 21, 2015





    எ .2922 பி .எஸ்.என் .எல் .உழியர்கள் கூட்டுறவு
சிக்கன நாணயச் சங்கம்லிட்., மத்திய தந்தி அலுவலகம் ,
தல்லாகுளம் .மதுரை  - 625002. 
=============================================

அருமை தோழர்களே ,தோழியர்களே  22.07.2015
புதன் அன்று , மதுரை தல்லாகுளத்தில் நடைபெறும் மதுரை சொசைட்டி  மீட்டிங்கில் 
உறுப்பினர்களுக்கு இம்முறை டிவிடெண்ட் 
ரொக்கமாக வழங்கப்படாது .மாறாக "செக் "
தான் வழங்கப்படும் அத்தோடு இம்முறை ஸ்வீட் + காரத்துடன்  "லஞ்ச்  பேக் "ஒன்றும் வழங்கப்படும் 
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் , NFTE - BSNL 
மதுரை  மாவட்டம்

Monday, July 20, 2015

‘0’வை அழுத்தினால் கேஸ் 

மானியம் குளோஸ் 


செல்போன் மற்றும் தரைவழி போன்களில் இருந்து தானியங்கி 
முறையில்கேஸ்சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறை 
தற்போது அமலில் இருந்துவருகிறது.முன்பதிவு செய்வதற்கான 
எண்ணுக்கு பேசும்போது அதில் வரும்தகவல்களுக்கு ஏற்ப பட்டனை 
அழுத்தி கேஸ் சிலிண்டரை பெறுகிறோம்.  வழக்கமாக புக்கிங் சேவை போன் இணைப்பு கிடைத்தவுடன் கியாஸ் 
முன்பதிவுசெய்ய 
எண்.1 அழுத்தவும் என்ற தகவல் முதலில் வரும்நாம் எண்.1அழுத்தினால் கேஸ் பதிவு எண் சொல்லப்பட்டு நமது மொபைலுக்கு அந்த எண்
எஸ்.எம்.எஸ்மூலம் வரும்அதன் பிறகு சில நாட்களில் நமது வீட்டுக்கு கியாஸ்சிலிண்டர் அனுப்பப்படும்கேஸ் சிலிண்டர் சப்ளை ஆனதும் 
அதற்கான மானியத்தொகை நமது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்த நிலையில், “ஏழைகளுக்காக கேஸ் மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்என்று ஏழை மக்களின் செல்போன்களுக்கே மத்திய அரசு குறுஞ்செய்தி 
அனுப்பிக் கொண்டிருக்கிறதுஇந்த நிலையில்கேஸ் மானியத்தை 
விட்டுக்கொடுப்பவர்களுக்கு’ வசதியாக முன் பதிவு செய்யும் போதே
 மானியத்தை ரத்துசெய்வதற்கான நடைமுறையை எண்ணெய் 
நிறுவனங்கள் அமல்படுத்தி யுள்ளனஅதன்படிகைபேசியிலோ அல்லதுதரைவழி போனிலோ கேஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யும்போது 
ஜீரோ பட்டனை அழுத்தினாலே கேஸ் மானியம்ரத்தாகி விடும்.
முன்பெல்லாம் சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது முன்பதிவு செய்ய 
எண்.1 அழுத்துங்கள்என்றதகவல் முதலில் வரும்அதன்படி 
வாடிக்கையாளர்களும் சவுகரியமாக எண்.1 அழுத்தி சிலிண்டரை 
முன்பதிவுசெய்தார்கள்ஆனால் தற்போது முன்பதிவு செய்யும்போது 
முதலில்கேஸ் மானியத்தை விட்டுக் கொடுக்க ஜீரோவைஅழுத்தவும்
என்று வருகிறதுஅதன் பிறகுதான் சிலிண்டர் முன்பதிவுக்கு எண்.1 
அழுத்தவும் என்று வருகிறது.இந்தநடைமுறையைப் பற்றி தெரியாதவர்கள் மற்றும் போன் பயன்பாட்டை பற்றி முழுமையாக அறியாத
பொதுமக்கள் தவறுதலாக ஜீரோவை அழுத்தினாலும் மானியம் ரத்தாகும் அபாயம் உள்ளது.ஜீரோவைதவறுதலாக அழுத்திய பிறகு அதை திருத்திக் கொள்ள போனில் வாய்ப்பு இல்லைபின்னர்மீண்டும்மானியத்தை 
பெற வேண்டும் என்றால் கேஸ் ஏஜென்சி யைத்தான் அணுக வேண்டும்இந்த நடைமுறையால்கேஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 
நடைமுறை சிக்கல்களை சந்திக்கஅதிக வாய்ப்பு உள்ளது.
எனவே சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது மானியம் ரத்து குறித்த
 விவரத்தை உடனடியாக நீக்க வேண்டும்என்று வாடிக்கையாளர்கள் 
கோரிக்கை வைத்துள்ளனர்.கேஸ் மானியத்தை ஒட்டுமொத்தமாக 
ஒழிப்பது எனமோடி அரசு தீர்மானித்துவிட்டதுஅதையே படிப்படியாக 
அமலாக்கி வருகிறதுஎன்பதை இதுஉறுதிப்படுத்துகிறது.

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 


Meeting  with CGM  for TTA Issues
-------------------------------------------------------------------------------

Comrade Pattabi and Com.Murali met CGM and discussed issues pertaining to JTO LICE and other TTA issues.

1. Compliance will be sent to Corporate Office on Calculation of vacancies.

2. Legal opinion will be sought and if needed opinion from corporate Office will also be sought on publication of JTO LICE results.

3. On filing of SLP, the decision of the Corporate Office will be followed.

4. With regard to Offg JTO Pay fixation under FR 22 1 a i, instructions will be sent to SSAs wherever problem in fixing of pay is faced.

5. On the recently issued orders on one increment to TTAs appointed after 1.1.2007, SSAs will be asked to do the fixation immediately.

6. Action will be taken for early publication of TTA LICE results.

S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Friday, July 17, 2015



Image result for news

கேடர்  பெயர் மாற்றம் குறித்த கமிட்டி கூட்டம் 
வரும் 28.7.2015 அன்று கூடுகிறது 
-----------------------------------------------------------------
கருணை அடிப்படை பணிக்கு CHPC மாநில அளவு அதிகரா கமிட்டி 
குரூப் சி & டி VACANCIE களையும் கருத்தில் கொண்டு /இணைத்து 
மதிப்பெண்களை கருத்தில் கொள்ள வலியுறுத்தியும் 
CHPC  கூட்டங்களை  31.7.2015 க்குள் மாநில நிர்வாகம் நடத்திடவும் 
BSNL CO தில்லி வழிகாட்டும் கடிதம் வெளியிட்டுள்ளது 

S .சிவகுருநாதன்,மாவட்ட செயலர் 

Wednesday, July 15, 2015

ஜூலை 15
பெருந்தலைவர் காமராஜர் 

பிறந்ததினம் 


பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.
காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.
கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.
தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.
காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.
”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.
காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..
தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.
1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.
1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.
இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.
அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.
1957 – ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.
பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.
”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.
பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.
விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.


S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்