Total Pageviews

Wednesday, September 09, 2015

அக்டோபர் 1–ந் தேதி முதல் பி.எஸ்.என்.எல். 

 இணையதள சேவை வேகம் அதிகரிப்பு :

Image result for bsnl broadband speed

நமது BSNL நிறுவனம் 2015 அக்டோபர் 1 முதல் 
அதிவேக இணையதள சேவையை குறைந்தபட்சம் விநாடிக்கு 
2 எம்.பி அதிவேகத்தில் செயல் படக்கூடிய இணையதள சேவையை
வழங்க உள்ளது. BSNL தற்போது குறைந்த பட்சம் 512 கே.பி.பி.எஸ்
வேகத்தில் இணையதள சேவையை வழங்கி வருகிறது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணையதள 
சேவையின் வேகம் அதிகரித்துள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக  BSNL நிறுவனம் தன்னுடைய செல் போன் வாடிக்கையாளர்களையும்,
தொலைபேசி வாடிக்கையாளர்களையும் இழந்து வருகிறது.

கடந்த ஆண்டு மார்ச் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரை 
1 கோடியே 78 லட்சம் செல் போன் வாடிக்கையாளர்களையும், 20 லட்சம்
தொலைபேசி வாடிக்கையாளர்களையும் இழந்து உள்ளது. இதனால்
நமது BSNL நிறுவனத்திற்கு ரூ.7,600/- கோடி வரை நஷ்டம் 
ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இணையதள சேவையின் வேகத்தை 
அதிகரிக்க நமது BSNL நிறுவனம் முடிவு செய்து உள்ளது. அரியானா மாநிலம் குர்கானில் அதிவேக இணையதள சேவை திட்டத்தை 
மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் 
திரு.ரவிசங்கர் பிரசாத் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இது குறித்து... நமது BSNL நிறுவனத் தலைவர் 
அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறும்போது இணையதள சேவையின் 
வேகத்தை 4 மடங்கு அதிகரித்துள்ளோம். இந்த சேவை 2015 அக்டோபர் 1 முதல் குறைந்த பட்சம் விநாடிக்கு 2 எம்.பி அதிவேகத்தில் இணையதள சேவையை கூடுதல் கட்டணம் இன்றி வாடிக்கையாளர்களுக்கு BSNL வழங்க உள்ளது என்றார்.

S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment