Total Pageviews

Friday, October 30, 2015

NFTE

மத்திய செயற்குழு...


அவுரங்கபாத் - மகாராஷ்ட்டிரா



நாள்: 01-11-2015 முதல் 03-11-2015 வரை

இடம்: அவுரங்கபாத்,மகாராஷ்ட்டிரா மாநிலம்


-: தலைமை :-

தோழர். இஸ்லாம் அகமது

அகில இந்திய தலைவர்


-: ஆய்படுபொருள் :-

அமைப்புநிலை

ஊழியர் பிரச்சனைகள் 

DELOITTEE குழு பரிந்துரை 

BSNL புத்தாக்கம் 

BSNL - MTNL இணைப்பு 

செல் கோபுரங்கள் தனி நிறுவனம் 

போனஸ் 

ஏனைய பிரச்சனைகள்     


காண இங்கே சொடுக்கவும்...


S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 


31.10.15 பனி நிறைவு பாராட்டு . . . வாழ்த்துக்கள் . . .


                                  1. C.  செல்லசாமி , TM - TMM

                        2. K.  கோவிந்தன் , TM - VLM 

                       3. T.  நாகேந்திரன் , TM - TRPLI                                        
                       
                       4. M.  பரமன் , TM - USP

                       5. P. தண்டாயுதபாணி , STS -ELLIS

                       6. P.  வெள்ளிமலை  , TM - DDG

                       7. P . விருமாண்டி , TM - TKM 


அருமைத் தோழர்களே ! 2015 -அக்டோபர் (31.10.15) இம் மாதம் நமது மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் பனி நிறைவு பெறும் தோழர்களுக்கு ஒருங்கிணைந்த பனி நிறைவு பாராட்டு விழா 31.10.15 காலை 11 மணிக்கு மதுரை பொது மேலாளர் அலுவலக 
மனமகிழ் மன்றத்தில் நடை  பெற உள்ளது. 
அனைவரின்  பணி  ஒய்வு காலம் சிறக்க, எல்லாவளங்களும் பெற்று நெடிய காலம் நீடுழி வாழ்க  NFTE  மதுரை மாவட்ட சங்கத்தின் மனபூர்வமான  . . .வாழ்த்துக்கள் . . . 

S. சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்  

நமது மத்திய சங்க கடிதங்கள்...

nfte க்கான பட முடிவு


நமது மத்திய சங்கம் கீழ்க்கண்ட பிரச்சனைகளை வலியுறுத்தி 
BSNL நிர்வாகத்திற்கு கடிதங்கள் எழுதியுள்ளது.

இந்த ஆண்டு நமது வருமானம் ரூ.800/- கோடி உயர்ந்துள்ளதால் BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உடனடியாக போனஸ் வழங்க வேண்டும்.

நமது BSNL நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் அளிப்பதற்கான கொள்கை உடனடியாக வகுக்கப்பட வேண்டும்.

TTA மற்றும் TM தோழர்களுக்கு புதிய தொழில் நுட்பத்தில் பயிற்சி அளிக்க வேண்டும். அதிகாரிகள் தாய்லாந்து சென்று பயிற்சி எடுத்து வருவது போல் ஊழியர்களுக்கு தாய்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டும்.

78.2% சத IDA அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி (HRA) வழங்கப்பட வேண்டும்.

டெலாய்ட்டி கமிட்டி அமுலாக்கத்தின் போது உபரியாகும் ஊழியர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே விற்பனைப்பிரிவு போன்ற பகுதிகளில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்  

மருத்துவக் கொள்கை...  

மறுபரிசீலனைக்குழு... 

medical policy க்கான பட முடிவு


தற்போதுள்ள மருத்துவ திட்டத்தை 

மறுபரிசீலனை செய்வதற்காக

 குழு ஓன்று அமைக்கப்பட வேண்டும் என்பது

  JCM  தேசியக்குழு கோரிக்கை. 
 

அதன் அடிப்படையில் 

NFTE மற்றும் BSNLEU  சங்கங்களிடம் 

BSNL  நிர்வாகம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளது. 



மேலும் சங்கத்திற்கு ஒருவர் வீதம் 

குழு உறுப்பினரை நியமனம் செய்யவும் 

நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 



மரித்துக்கொண்டிருக்கும் மருத்துவ திட்டம் 

மறுவாழ்வு பெற்றால் நமக்கு மகிழ்ச்சிதான்.


S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Wednesday, October 28, 2015


மாற்றல் கொள்கையில்... சில திருத்தங்கள்...

staff transfer clipart க்கான பட முடிவு
நமது BSNL நிர்வாகம் ஊழியர்களுக்கான மாற்றல் கொள்கையில்
(விதி 13... உட்பிரிவு 4-ல்...) சில திருத்தங்களை கொண்டு வருவதற்காக...
முன்மொழியப்பட்ட திருத்தங்களில் சில...
 மாற்றல் கொள்கையில் (Transfer Policy) கிராமப்புற சேவைகளுக்கான மாற்றல் காலம் (Tenure) 3 ஆண்டுகள்.
  
மாற்றல் காலத்தில் அனுமதிக்கப்பட்ட விடுப்புக்கு மேலாக விடுப்பு எடுத்தால் அந்த விடுப்பு மாற்றல் காலத்தில் கழிக்கப்படும். 
மாற்றலில் விருப்பம் இல்லாத பெண் ஊழியர்களுக்கு 55 வயது (அந்த வருடத்தில் மார்ச் 31 அன்று) பூர்த்தியானால்  மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

 Click here for the proposed modification.
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Saturday, October 24, 2015



GPF-க்கு நிதி ஒதுக்கீடு...














GPF-க்கு தேவையான (தமிழ் மாநிலத்திற்கு : ரூபாய்.12 கோடி)... 
நிதியை நமது மத்திய நிர்வாகம் 23-10-2015 அன்று ரூபாய். 
12 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில்... GPF தொகைக்கு விண்ணப்பித்த தோழர்,
தோழியர்களுக்கு 27-10-2015 அன்று பணப்பட்டுவாடா செய்யப்படும் 
என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடுமையான நிதி நெருக்கடியை காரணம் காட்டி... GPF இல்லை என்ற... நிர்வாகத்தின் நிலையை மாற்றி... GPF-க்கு தேவையான நிதியை... 
போராடி... பெற்றுதந்த... நமது மத்திய... மாநில... சங்கத்திற்கு...
நமது நன்றியை உரித்தாக்குகிறோம்.

என்ன கொடுத்தும் ஒற்றுமை...
என்னையே (எங்களையே) கொடுத்தும் ஒற்றுமை...
- தோழர்.குப்தா.

என்ற தாரக மந்திரத்தை நெஞ்சில் சுமப்பவர்கள் நாம்... 
மக்கள் விரோத... ஊழியர் விரோத போக்கை மட்டுமே கடைப்பிடிக்கும்
இன்றைய  அரசாங்கத்தையும், நிர்வாகத்தையும் எதிர்த்து 
போராட வேண்டுமென்றால், ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற
வேண்டுமென்றால்... நாம் அமைப்பு ரீதியாக வளர்ந்திட வேண்டும்...
அமைப்பு விதிகளில் ஒன்று தான் நம் மாநாடு... 
மாநாடுகள் நடத்தாமல், அமைப்பு ரீதியாக வளராமல்... 
எதையும் சாதிக்க முடியாது... நல்லவர்கள் தொடந்து... 
பதவிக்கு வரவேண்டும்... பதவிக்காக அல்ல... 
ஊழியர்களின் நலன் காக்க... தொடர்ந்து பாடுபட...

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Friday, October 23, 2015



தீபாவளி விடுமுறை 10/11/2015க்கு மாற்றப்பட்டுள்ளது.

மிலாடி நபி விடுமுறை 23/12/2015க்கு மாற்றப்பட்டுள்ளது..


அக்டோபர் 2015 முதல் பணி  நிறைவு பெறும் தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம் அந்த மாதமே வழங்கப்பட வேண்டும் என CORPORATE  அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.


மனிதவள இயக்குநராகப் பணிபுரியும் திருமதி.சுஜாதாராய்  காலியாக உள்ள  DIRECTOR FINANCE  இயக்குநர் நிதிப் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.


ஒரு மாத போனஸ் உச்சவரம்பான ரூ.3500/-ஐ ரூ.7000/-மாக உயர்த்துவதற்கும், போனஸ் பெறுவதற்கான மாத ஊதியத்தை ரூ.10,000/-லிருந்து ரூ.21,000/-மாக  உயர்த்துவதற்கும்  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது மிக நீண்ட நாள் பிரச்சினையாகும். நமது செப்டம்பர் 2 வேலை நிறுத்தக் கோரிக்கைகளுள் ஒன்றாகும்.


5வது தமிழ் மாநில மாநாட்டிற்கான வரவேற்புக்குழு வேலூர் தோழர்களால் அமைக்கப்பட்டுள்ளது.


பத்தாண்டுகளாக JTO பதவியில் தற்காலிகமாகப் பதவி வகிக்கும் TTA தோழர்களுக்கு மீண்டும் பயிற்சி என்பது தேவையற்றது என தமிழ் மாநிலச்சங்கம் மாநில நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளது.


RELIANCE , AIRCEL மற்றும் MTS தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ஒரே நிறுவனமாக இணைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு இணைப்பு ஏற்பட்டால் தொலைத்தொடர்பில் மூன்றாவது பெரிய நிறுவனமாக புதிய நிறுவனம் அமையும்.

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Thursday, October 22, 2015


திருத்தியமைக்கப்பட்ட... விடுமுறைகளுக்கான...

BSNL நிர்வாகத்தின்... உத்திரவு...



S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்