Total Pageviews

Saturday, November 14, 2015

நவம்பர் - 14

குழந்தைகள் தினம்
 


வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். அவர்கள் விறுப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதாலேயே இறைவனுக்கு சமமாக ஒப்பிடப்படுகின்றனர். கள்ளமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 20ம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14 ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இயற்கையிலேயே குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்டவர் பண்டித ஜவகர்லால் நேரு. அதன் காரணமாக அவரை நேரு மாமா என்று அனைவரும் அன்போடு அழைத்தனர். குழந்தைகள் மீது கொண்ட அளவுகடந்த பாசம் காரணமாகவே தனது பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுமாறு வலியுறுத்தினார் நேரு.

குழந்தைகளுக்கு நம் நெஞ்சு நிறை வாழ்த்துக்கள்.

S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர்(பொறுப்பு )   


No comments:

Post a Comment