Total Pageviews

Friday, April 21, 2017


வைப்புநிதி
GPF  வைப்புநிதி BSNL ஊழியர்களுக்கு இனிமேல் நேரடியாக 
DOTCELL மூலமாகப் பட்டுவாடா செய்யப்படும் என
 CORPORATE அலுவலகம் அறிவித்துள்ளது. ஊழியர்கள் ESS எனப்படும் ONLINE மூலம் விண்ணப்பித்தவுடன் சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரி அதனை ஒப்புதல் செய்து நேரடியாக DOTCELLக்கு E-MAIL மூலம் அனுப்பிவிடுவார். DOTCELL நேரடியாக ஊழியர்களின் வங்கிக்கணக்கில் வைப்புநிதியை வரவு வைத்துவிடும். 

இந்தப்பணி இரண்டு கட்டமாக அமுல்படுத்தப்படும். முதற்கட்டமாக ஏப்ரல் 2017க்குள்  12 மாநிலங்களிலும், இரண்டாம் கட்டமாக ஏனைய மாநிலங்களிலும் அமுல்படுத்தப்படும். தமிழகம் இரண்டாம் கட்ட அமுலாக்கத்தில் உள்ளது. வைப்புநிதி DOTCELL மூலமாகப் பட்டுவாடா செய்வதன் மூலமாக ஊழியர்கள் விரைவாக பட்டுவாடா பெறமுடியும். ஆனால் தற்போதுள்ள நடைமுறைப்படி மாதாமாதம் 
விண்ணப்பிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் IDA
ஏப்ரல் 2017 முதல் 117.1 சதமாக குறைந்துவிட்ட
 IDA உத்திரவை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
கேடர் பெயர் மாற்றம்
விடுபட்ட கேடர்களுக்கான பெயர்மாற்றம் பற்றி அதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் 18/04/2017ல் விவாதிக்கப்பட்டது. 
தற்போது 19 வகையான GROUP ‘D’ கேடர்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே கேடராக அறிவிக்கும்படி உழியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைப்போலவே GROUP ‘C’ கேடரிலும் பெயர் மாற்றம் செய்யப்படாத பல கேடர்கள் உள்ளன. இதனைப் பற்றி விவாதித்து முடிவு செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அடுத்த கூட்டம் 26/06/2017ல் நடைபெறும் என்றும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------
அங்கீகாரமற்ற சங்கங்களின் கோரிக்கைகள்
அங்கீகாரமற்ற சங்கங்கள் தங்களது ஊழியர் பிரச்சினை பற்றி எடுத்துச்சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என BSNL நிர்வாகம் அனைத்து மட்ட நிர்வாகங்களையும் அறிவுறுத்தியுள்ளது. அவர்களின் கோரிக்கையை செவிமடுக்க மறுப்பது தவறு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே நேரம் அங்கீகாரமற்ற சங்கங்களுடன் எழுத்துப்பூர்வமாக எந்தக் கடிதத்தொடர்பும் கூடாது 
எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
போன்மெக்கானிக் இலாக்காத்தேர்வு
நடைபெறவுள்ள போன்மெக்கானிக் இலாக்காத்தேர்வு எழுதுவதற்கான கல்வித்தகுதியைத் தளர்த்த வேண்டும் எனவும்…. தேர்வுக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என சங்கங்களின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் சாதகமாக பரிசீலிக்கும் என நம்புவோம்.

No comments:

Post a Comment