Total Pageviews

Thursday, May 04, 2017

Image result for karl marx images காரல் மார்க்ஸ் 200வது பிறந்த நாள்   

மனிதகுலத்தின்  நீண்டநெடிய வாழ்க்கை போராட்டம்  
தோழர் காரல் மார்க்ஸ்ஸை உருவாக்கியது 
1818 மே 5ம் நாள் ட்ரியர் ( Trier) நகரத்தில் பிறந்தார் 
பல்கலைக்கழக கல்வி முடித்து முனைவர் பட்டம் பெற்றார் 
ஜெர்மனியில் நிலவிய தத்துவார்த்த விவாத சூழலால் ஈர்க்கப்பட்டு 
கெகலின் தத்துவங்களில் ஆர்வம் காட்டத்தொடங்கினார் 
பத்திரிக்கை ஆசிரியரானார்
தத்துவம் , அரசியல், பொருளாதாரம் 
என அனைத்தைப்பற்றியும் எழுதினார்
தத்துவார்த்த, பொருளாதார விவாதத்தில் இயக்கவியலை  நிரூபித்தார் 
ஆளும்வர்க்கங்களுக்கு, அரசுக்கு எதிராக செயல்படுகிறார் என 
நாடுகடத்தப்பட்டார். குடியுரிமை பறிக்கப்பட்டது 
பாரிஸ் சென்றார்.
உற்ற தோழனான ஏங்கெல்ஸை சந்தித்தார் 
இருவரும் முயன்று கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோவை வெளியிட்டனர் 
ஆளும்வர்க்கங்கள் அலரட்டும் என அறைகூவல் விடுத்தனர்  
தொழிலாளர் அமைப்புக்களோடு சேர்ந்து செயல்பட்டார் 
அங்கிருந்தும் நாடுகடத்தப்பட்டார் மார்க்ஸ் 
லண்டனில் குடியேறினார் 
கடுமையான உழைப்பிற்கும், நீண்டநெடிய ஆய்விற்குப்பின் 
மூலதனம் (டாஸ் கேப்பிடல்)  வெளியிடப்பட்டது 
முதலாளித்துவத்தின் தோற்றம், வளர்ச்சி
உற்பத்திசாதனங்களின் வளர்ச்சி 
முதலாளி - தொழிலாளி உறவுகள், கூலி 
சுரண்டல் 
உபரி உற்பத்தி - லாபம் 
முதலாளித்துவத்தின் வீழ்ச்சி
சோசலிசத்தின் எழுச்சி  
அனைத்தையும் அறிவியல் விதிகளின் 
அடிப்படையில் விளக்கி, நிரூபித்துக்காட்டினார் 
மூலதனம் (டாஸ் கேப்பிடல்) பொருளாதார ஆய்விலும் 
வர்க்க அரசியலிலும் பெரும் புரட்சியை உருவாக்கியது 
வரலாற்றை தலைகீழாய் புரட்டிபோட்டது 
மார்க்ஸும் ஏங்கெல்சும் 
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையும் 
வரலாற்று  பொருள்முதல்வாதத்தையும் 
செழுமைப்படுத்தி 
உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான 
வெல்லற்கரிய ஆயுதமாய் உருவாக்கினர் 
மார்க்சியம் பிறந்தது;அது  
நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்திடும்
வளர்ந்திடும்  
சொல்லிலடங்கா துயரத்தையும், வறுமையையும் 
எதிர்கொண்டு லட்சியவாழ்க்கை வாழ்ந்து 
உழைக்கும் வர்க்கத்தின் 
விடுதலைக்கு வித்திட்ட 
ஆயிரம் ஆண்டின் மாமேதை
காரல் மார்க்ஸின் 
சிந்தனைகளை போற்றுவோம் 
நம் வாழ்வில் 
கடைபிடிக்க முயற்சிப்போம்   
  

 

 




No comments:

Post a Comment