Total Pageviews

Friday, November 24, 2017



1954 நவம்பர் 24ல் தபால் மற்றும் தந்தித்துறையில் செயல்பட்டுவந்த 9சங்கங்களை ஒற்றுமைப்படுத்தி ஒரே குடையின் கீழ் கொண்டுவந்துஉருவாக்கப்பட்டதுதான் NFPTE சம்மேளனம். 
தபால்-தந்தி- தொலைபேசி தொழிலாளர்கள் பெற்றுள்ள உரிமைகள் - சலுகைகளுக்கு NFPTE தலைமையின் தொலைநோக்குப்பார்வையும் அனைவரையும் அரவணைத்து நடத்திய இயக்கங்கள், போராட்டக்கள் தான் காரணமென்றால் அது மிகையாகாது.
தபால் துறை - தொலைபேசித்துறை என தனியாக பிரிக்கப்பட்டபின் 
NFPE-NFTE  என்றானது. 
 மின்னணுத்தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் காரணத்தால் தொலைபேசித்துறை தகவல்தொழில்நுட்ப மையமானது. 
உலகநாடுகளிடையே நடந்துவந்த பனிப்போரின் தன்மை மாற்றத்தால் அரசுதுறைகள் பொதுத்துறைகளாக மாற்றப்பட்டு தனியார் நிறுவனங்கள் ஊக்கப்படுத்தப்பட்டன. 
பன்னாட்டு பகாசூர நிறுவனங்கள் வளர்ந்திட அதீத வாய்ப்புக்கள் வழங்கிட வழிவகைகள் செய்யப்பட்டன. 
தொலைபேசித்துறை MTNL-BSNL  என பிரிக்கப்பட்டது. 
NFTE சம்மேளனம் NFTE(BSNL)லாக மாறியது.
"எதைக்கொடுத்தும் ஒற்றுமை என்னையே கொடுத்ததும் ஒற்றுமை" என்ற தரகமந்திரத்திற்கு உதாரணமாக வாழ்ந்து மறைத்த தொழிற்சங்க பிதாமகன் தோழர் O.P.குப்தா அவர்களின் சீரிய வழிகாட்டலின் அடிப்படையில் ஒன்றுபட்ட இயக்கங்கள் காட்டுவோம். 
BSNLலை காப்போம். 
இதுவே சம்மேளனதின சூளுரை. 

No comments:

Post a Comment