Total Pageviews

Friday, April 13, 2018

ஏப்ரல் - 14 

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் 

Tuesday, April 10, 2018ஆர்ப்பாட்டம்

   வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்திற்கு எதிரான 
உச்சநீதிமன்றக்கருத்துக்கு எதிராக
மதுரை PGM  அலுவலத்தில்
இன்று மதியம் 1.00 மணியளவில்  
 BSNL  அனைத்து தொழிற்சங்கங்கள் 
ஆர்ப்பாட்டம்.

Sunday, April 08, 2018


நேர்மையின் சிகரம் 
தோழர் .ஓம் பிரகாஷ் குப்தா 
பிறந்த தினம் 
ஏப்ரல் -8


தொழிலாளர் மீது பாசம் மிகுந்தவன்.... 
தொழிலாளர் உள்ளத்தையும் உணர்வையும்  புரிந்தவன்..... 
தொலைநோக்குப் பார்வை கொண்டவன் ......
புகழ்ச்சி விரும்பாதவன் .......
வஞ்சிபுகழ்ச்சி செய்யாதவன்....... 
உன்னை போல் இனியாரும் இங்குகில்லை ......
 குப்தா புகழ் ஓங்குக!....... 

Thursday, April 05, 2018


ஒப்பந்த ஊழியர்களுக்கான விலைவாசிப்படி
VDA 01/04/2018 முதல்
கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.


UNSKILLED

பிரிவு நகரம் – ரூ. 17= நாளொன்றுக்கு உயர்வு
ரூ.536லிருந்து ரூ.553/= ஆக  உயர்வு.

பிரிவு நகரம் – ரூ. 14= நாளொன்றுக்கு உயர்வு
ரூ.448/=லிருந்து ரூ.462/= ஆக  உயர்வு.

பிரிவு நகரம் – ரூ. 11= நாளொன்றுக்கு உயர்வு
ரூ.359/=லிருந்து ரூ.370/= ஆக  உயர்வு.


01/04/2018 முதல்
UNSKILLED 
 நாள் கூலி


01/04/2018 முதல்
 SEMI SKILLED
 நாள் கூலி


01/04/2018 முதல்
 SKILLED 
நாள் கூலிபிரிவு நகரம் ரூ.553/=
பிரிவு நகரம் ரூ.462/=
பிரிவு நகரம் ரூ.370/=பிரிவு நகரம் ரூ.612/=
பிரிவு நகரம் ரூ.522/=
பிரிவு நகரம் ரூ.433/=பிரிவு நகரம் ரூ.673/=
பிரிவு நகரம் ரூ.612/=
பிரிவு நகரம் ரூ.522/=


Tuesday, April 03, 2018


இரங்கல்


NFTE தமிழ் மாநிலச்செயலர்

தோழர்.நடராஜன் அவர்களின்

அன்புத்தாயார்
திருமதி.பாலாம்பாள்

அவர்களின் மறைவிற்கு

நமது ஆழ்ந்த இரங்கலை

உரித்தாக்குகின்றோம்.


Friday, March 30, 2018

செல் கோபுரங்களை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து தனியாக பிரித்து நம்மை முடக்கிடநினைக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து 27.03.2018 அன்று அனைத்துச்சங்க கூட்டமைப்பு சார்பாக நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

 27.03.2018 அன்று மாலை FNTO சங்க அலுவலகத்தில் நடைபெற்ற 

அனைத்துச்சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் 

3 வது  சம்பளமாற்றம் தொடர்ப்பாக தொலை தொடர்பு துறை (DOT ) பொதுத்துறை ( DPE ) அலுவலகத்திற்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. தொடர்ந்து மேல் முயற்சிகளை எடுப்பது.

செல் கோபுரங்களை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து தனியாக பிரித்து நம்மை முடக்கிடநினைக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து 


கடும் தொடர் போராட்டத்தை நோக்கி 

                                               

                                                 பெருந்திரள் தர்ணா 

          தலைமை அலுவலகம் ( CO ) மாநிலத்தலைமையகம் ( CGM OFFICE ) மாவட்ட தலைமையகம் ( GM OFFICE ) ஆகிய 3 இடங்களில் 12.04.18 அன்று பெருந்திரள் தர்ணா நடத்துவது. 

ஆளுநர் மளிகை நோக்கி பேரணி 

19.04.18 அன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச்சென்று கோரிக்கை மனு சமர்ப்பித்தல்.

தேசிய கருத்தரங்கம்   

    மே மாதம் 9 அல்லது 10 தேதியில் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்கம் நடத்துவது.

நம் மத்தியில் நிலவும் சுணக்கம் நீக்கிட தொடர் கூட்டங்கள், பரப்புரைகள் மூலம் கடும் போராட்டத்திற்கு தயாராவோம். நம்மை முடக்கிடும் முயற்சிதனை முறியடிப்போம்.

Monday, March 12, 2018


புறப்படு தோழா….

NFTE
அகில இந்திய மாநாடு

மார்ச் 14…15…16… 
அமிர்தசரஸ் – பஞ்சாப்

அடைந்தவை ஏராளம்…
இழந்தவை ஏராளம்…

இழந்ததை மீட்டிட…
இயக்கம் காத்திட…

புறப்படு தோழா….
பொற்கோவில் நோக்கி..
------------------------------------------------------------------------------------------
மதுரை மாவட்டத்திலிருந்து 15 தோழர்கள் பங்கேற்பு...

Thursday, March 01, 2018அன்பு தோழர்.  ராஜகோபால், STR

முன்னால் மதுரை மாவட்ட செயலர்

28/02/2018 பணி ஓய்வுபெறுகிறார்.

அவருடைய பணி ஓய்வு காலம்

சிறப்புடன் அமைய

மதுரை மாவட்ட சங்கத்தின்

வாழ்த்துக்கள்......

Sunday, February 25, 2018

கூட்டமைப்பு (AUAB) தலைவர்கள்  அமைச்சருடன் பேச்சுவார்த்தை  

                 
   23.02.18 பேரணியின் போது இலாக்கா (DOT) செயலருடன் 
நடந்த பேச்சு வார்த்தையின்  தொடர்ச்சியாக 24.02.18 அன்று
 அமைச்சர்  மாண்புமிகு மனோஜ்  சின்ஹா  அவர்களுடன் 
 பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இலாகா செயலர், சிறப்பு செயலர், CMD BSNL, இயக்குனர்
(மனித வளம்) மற்றும் அமைச்சரின் OSD ஆகியோருடன்
கூட்டமைப்பு  சார்பாக:
தோழர்கள்  அபிமன்யு,  BSNLEU,
 சந்தேஸ்வர்சிங்,  NFTE,
செபாஸ்டின்,  SNEA,
பிரகலாத் ராய்,  AIBSNLEA,
செயப்பிரகாஷ்,  FNTO,
 ராம்,  SEWA BSNL,
ரவி வர்மா ,AIGETOA,
மல்லிகார்ஜூன், BSNL MS
சர்மாBSNL ATM  
ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

3வது  சம்பளமாற்றம்
தொலைதொடர்பு இலாகா தொடர்ந்து சம்பள மாற்றத்தை மறுத்து 
வந்தது. சம்பள பேச்சுவார்த்தையை  தொடங்கிடவும்
பொதுத்துறை இலாகா (DPE )மற்றும் அமைச்சரவை ஒப்புதலை 
பெற்றிடவும்  நடவடிக்கை எடுக்கப்படும்.

துணை  கோபுர ( டவர் ) நிறுவனம்
அமைச்சரின் பதில் திருப்திகரமாக இல்லை. துணை  கோபுர
 ( டவர் ) நிறுவனத்தை திரும்பப்பெற  தேவையான  வழி  வகைகளை  கண்டறிந்து  முயற்சிக்கப்படும்.

ஓய்வூதிய  மாற்றம்
ஓய்வூதிய  மாற்றம் செய்திட தேவையான
நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓய்வூதிய  பங்களிப்பு
அதிகபட்ச  ஊதிய அடிப்படைக்கு (  maximum pay ) பதிலாகDoPT ன்  2006ம்  ஆண்டு  உத்தரவின்  அடிப்படையில்  நடப்புச் சம்பளத்தின்  ( actual pay ) படி கணக்கிட தேவையான  நடவடிக்கையை  இலாகா  செயலர்  ( DOT ) எடுப்பார்.4G சேவை  வழங்குதல்
உரிய  நடவடிக்கை எடுத்திட உறுதியளித்துள்ளார்.

2வது  சம்பளமாற்ற  குளறுபடிகள்
சரிசெய்திட தேவையான  நடவடிக்கையை  இலாகா  செயலர்
 ( DOT ) எடுப்பார்.

இன்றைய  சந்திப்பின்  தொடர்ச்சியாக  அமைச்சரையும்

இலாகா  செயலரையும்  கூட்டமைப்பு  தலைவர்கள் மீண்டும் 

சந்தித்து  பேசவுள்ளனர் .


ஒற்றுமைக்கு கிடைத்த பலன்;   

                  விழிப்பாய்  இருபோம் ;

                                 வென்றிடுவோம்.